சி.ஏ.ஏ. விவகாரத்தில் முதலமைச்சரின் உறுதி மீது இஸ்லாமிய சகோதரர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பசுமைவழி சாலையிலுள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் வெளியே வந்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்ததாகக் அவர் கூறினார்.
மேலும் தமிழகத்தில் சிஏஏவால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் தன்னிடமும் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.