பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம், ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் கொள்கை எனவும், மாநில அரசின் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.