மத்திய பிரதேச காங்கிரஸின் முன்னணி தலைவர் ஜோதிராத்திய சிந்தியாவின் சர்ச்சை பேச்சால் அம்மாநில காங்கிரஸில் பிளவு ஏற்படும் என கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் முன்பிருந்தே மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிப்பதில் முதல்வர் கமல்நாத்துக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராத்திய சிந்தியாவிற்கும் இடையே போட்டி நிலவியது, மேலும் மத்திய பிரதேச முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. ஆனால் முதல்வர் பதவியை கமல்நாத்திற்கு வழங்கியது காங்கிரஸ் தலைமை.
மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையும் அவருக்கே வழங்கியது. இது பற்றி அதிருப்தியில் இருந்தார் ஜோதிராத்திய சிந்தியா, இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று மத்திய பிரதேசத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார் சிந்தியா.
அதில் "தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற தவறினால் நீங்கள் தனித்து விடப்பட்டதாக என்ன வேண்டாம் உங்களுடன் நானும் தெருவில் இறங்கி அடிப்பேன்" எனவும், மேலும் "நான் உங்களுக்கு வாளும் கேடயமாக மாறுவேன்:" என்றும் தெரிவித்தார். அவரின் இந்த சர்ச்சை பேச்சு மத்திய பிரதேச மாநில காங்கிரஸில் பெரும் அதிர்வை உண்டாக்கி உள்ளது. இது குறித்து முதல்வர் கமல்நாநாத் கூறும் போது ”தேர்தல் அறிக்கை என்பது சில மாதங்களுக்கு அல்ல ஐந்து வருடங்களுக்கு தான் இன்னும் நிறைய காலம் இருக்கிறது” என தெரிவித்தார்.
.