இந்தியாவிற்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் லூக் ரோங்கி ஃபீல்டிங் செய்தார்.
இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி உள்ளது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் லூக் ரோங்கி களமிறங்கி ஃபீல்டிங் செய்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னர் காயமடைந்த மிட்சல் சான்டனருக்கு மாற்றாக ஒரு வீரரின் பெயரை குறிப்பிட்டது, ஏற்கனவே நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயமுற்றுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஸ்காட் குகெலினும் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை.
இந்த நிலையில் அவருக்கு மாற்றாக நியூசிலாந்து அணியின் துணை பயிற்சியாரும் முன்னாள் ஆஸ்திரேலியா , நியூசிலாந்து அணிகளில் விக்கெட் கீப்பராக இருந்த லூக் ரோங்கி ஃபீல்டிங் செய்தார்.
இந்த மாதிரியான சிக்கல்களை நியூசிலாந்து சந்திப்பது இது முதல்முறை அல்ல, ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியிலும் இதே மாதிரியான ஒரு சூழ்நிலையின் பொது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் முன்னாள் தொடக்க ஆட்டகாரருமான பீட்டர் புல்டனை களமிறங்க செய்தது குறிப்பிடதக்கது. இந்தியாவிற்கு எதிராக களமிறங்கிய.. நியூசிலாந்து பயிற்சியாளர் !!