கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டுமே ஆட உள்ளார்.
ஆஸ்திரேலிய புதர் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகிறது.
இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில், இந்த போட்டிக்கு நடுவே, டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ள டெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளபோதிலும், ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய தயார் என பதிவிட்டுள்ளார்.