சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த கூடைப்பந்து வீரர் Kobe Bryant-ன் மரணம் தம்மை மிகவும் பாதித்து விட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, கூடைப்பந்தாட்டத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு வீரர் Kobe Bryant. அவர் விளையாடும் போட்டிகளை டிவி-யில் பார்க்க அதிகாலையிலேயே எழுந்த நாட்களும் இருக்கின்றன என்று நினைவு கூர்ந்தார்.
எனவே Kobe Bryant-ன் இறப்பு என்னை தடுமாற செய்துள்ளது. வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்று. நாளை நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அழுத்தங்களில் சிக்கி கொள்ளும் நாம் வாழ்க்கையை வாழவும், அனுபவிக்கவும் செய்வதில்லை.
சில தருணங்களில் வாழ்க்கையை மறந்துவிட்டு வேலை அல்லது விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் வாழ்க்கையை வாழ மறக்கிறோம். Kobe Bryantன் மரணத்திற்கு பிறகு என் வாழ்வின் கண்ணோட்டம் மாறிவிட்டது.
வாழும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க வேண்டும். நாளின் முடிவில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதை விட மிக முக்கியமான ஒன்று வாழ்க்கை என்றார் கோலி. வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் அதன் நிலையற்ற தன்மையை Kobe Bryant-ன் இழப்பு உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.