ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஜிவெரேவை டொமினிக் எதிர்கொண்டார். முதல் செட்டை டொமினிக் நழுவ விட்ட போதிலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடினார்.
3 மணி நேரம் 42 நிமிடம் நீடித்த போட்டியில், 3-6, 6-4, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் வெற்றி பெற்றார்.
வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இறுதிச்சுற்றில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சுடன், டோமினிக் பலப்பரிட்சை நடத்த இருக்கிறார்.