ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி, நோவக் ஜேகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
தொடக்கத்தில் கடும் நெருக்கடி கொடுத்த பெடரர், பின்னர் ஜோக்கோவிச்சின் ஆக்ரோஷ ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 7-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் நபருடன் மோத இருக்கிறார்.