நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 5-0 என கைப்பற்ற தீவிரம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் ஹாமில்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 வது இருபது ஓவர் போட்டியில் ‘ஒரு கட்டத்தில் தோல்வியடைந்து விடுவோம் என்று எண்ணியதாக அவர் கூறினார். ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் அற்புதம் என்று அவர் பாராட்டினார்.
நியூசிலாந்திற்கு எதிரான தொடரை 5-0 எனக் கைப்பற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.அடுத்து வரும் போட்டிகளில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறிய அவர், சைனி, வாஷிங்டன் சுந்தர் இந்த சீதோஷ்ண நிலையில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.