பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், பாஜகவில் இணைந்துள்ளார்.
பேட்மிண்டனில் இந்தியாவுக்காக பல்வேறு வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள சாய்னா, முன்னணி வீராங்கனைகளுள் ஒருவராக வலம்வருகிறார். இந்நிலையில் சாய்னா நேவால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். டெல்லியில், பாஜக தேசிய செயலாளர் அர்ஜுன் சிங் முன்னிலையில், சாய்னாவும் அவரது சகோதரி சந்த்ரன்ஷுவும் பாஜகவில் இணைந்தனர்.
பிரதமர் மோடியுடன் இணைந்து நாட்டுக்காக உழைக்க விரும்புவதாகவும் சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பாஜகவுக்காக சாய்னா பிரசாரம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.