மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டால், இந்திய கிரிக்கெட்டுக்குதான் பேரிழப்பு என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி, முதலாவது உலக கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 83 என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது டோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலலித்த அவர், இந்திய கிரிக்கெட் அணிக்காகவும், நாட்டுக்காகவும் பல ஆண்டுகளாக தோனி சேவையாற்றி இருப்பதாக தெரிவித்தார்.
அண்மை காலமாக தோனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய கபில்தேவ், அவர் ஓய்வு தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிட்டாலும், இந்திய கிரிக்கெட்டுக்குதான் பேரிழப்பு என்றார்.