சேவாக் தலையில் இருக்கும் முடியை காட்டிலும் தம்மிடம் அதிக பணம் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த சேவாக், இந்தியாவில் வர்த்தகம் செய்ய அக்தர் விரும்புவதாகவும், ஆதலால் இந்தியாவை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருவதாகவும் கூறியிருந்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் யூ டியூப்பில் அக்தர் வெளியிட்ட வீடியோவில், சேவாக்கின் தலையில் இருக்கும் முடியை காட்டிலும் தன்னிடம் அதிக பணம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்தை நகைச்சுவையாகவே தெரிவிப்பதாகவும், இதை நகைச்சுவையாகவே சேவாக் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அக்தர் கூறியுள்ளார்.