காயத்துடன் தான் பந்துவீசிய சம்பவத்தை குறிப்பிட்டு, மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடிக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்தார்.
டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு, மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, 2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தாடையில் காயம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல் இந்திய அணிக்காக விளையாடிய கும்ப்ளேவை மேற்கோள்காட்டி நேர்மறையான சிந்தனை மற்றும் ஊக்கத்தை இதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் தனது ஆட்டத்தை குறிப்பிட்டு பேசியமைக்காக பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள அனில் கும்ப்ளே, மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.