ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார். அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் பிப்ரவரி 8-ந்தேதி அன்று ‘புஷ்பயர் பேஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் போட்டி நடத்தப்படும்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதுகின்றன.
இந்த அணிகளுக்கு பயிற்சியாளர்களாக முறையே கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.