கிரிக்கெட் உலகின் மிக வேகமான பந்தை 17 வயதான இலங்கை வீரர் மதீஷா பதிரனா, இந்திய அணிக்கு எதிராக வீசியுள்ளார்.
தென்னாப்ரிக்காவில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், கடந்த 19-ம் தேதி இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டது. போட்டியின் 4-வது ஓவரின் கடைசி பந்தை மதிஷா வீசியபோது, வைடாக சென்ற அந்த பந்தின் வேகம் மணிக்கு 175 கிலோ மீட்டர் என திரையில் தோன்றியது.
இதுவரையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் வீசிய, 161 புள்ளி 3 கிலோ மீட்டர் வேகத்திலான பந்தே உலகில் வேகமாக வீசப்பட்ட பந்தாக கருதப்படுகிறது.
இந்த சூழலில் மதிஷாவின் பந்துவீச்சு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பந்தின் வேகத்தை கணிப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது.
வீடியோவை காண: https://twitter.com/GOATKingKohli/status/1219214778050072576