பின்லாந்தில் நடைபெற்ற 55வது ஆர்டிக் லேப்லேண்ட் (ARCTIC LAPLAND) கார் பந்தயத்தில், பார்முலா ஒன் கார் பந்தய வீரர் வால்டெரி போட்டாஸ் (Valtteri bottas) 9வது இடத்தை பிடித்தார்.
பனி படர்ந்த சாலையில் 201 கிலோ மீட்டர் தூரம் பந்தய தூரமாக நிர்ணியிக்கப்பட்டு இருந்தது.மொத்தம் 135 கார்கள் இந்த போட்டியில் பங்கேற்றன.
போட்டிக்கு பின்பு பேசிய வால்டெரி போட்டாஸ், இந்த போட்டி தனக்கு மிகுந்த சவாலாகவும், மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது என்றும், இந்த பாதைகளில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கும் போது, வளைவுகளில் திருப்புவதுதான் மிகுந்த சவாலாக இருந்ததாகவும் கூறினார். இந்த போட்டியில் பின்லாந்து நாட்டை சேர்ந்த கல்லி ரோவன்பெரா (Kalle rovanpera) முதல் இடத்தை தட்டி சென்றார்.