ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த கேப்டன் எனும் பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், களமிறங்கிய கேப்டன் கோலி, 89 ரன்கள் விளாசினார். இப்போட்டியில், கோலி 14 ரன்கள் எடுத்தபோது, கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்தவர் எனும் பெருமையை, தோனியிடமிருந்து தட்டிப்பறித்தார்.
தோனி 127 போட்டிகள் மூலம் படைத்த இச்சாதனையை,82 போட்டிகளிலேயே கோலி முறியடித்தார். அதேபோல, கேப்டனாக களமிறங்கி, அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் எனும் சிறப்பையும் கோலி பெற்றார். அந்த வகையில், 11,207 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருந்த தோனியின் சாதனையை கோலி தகர்த்துள்ளார்.
Read More : இரக்கம் இல்லையா உனக்கு.. காட்டடி அடிக்கிறாயே.! ரோஹித் சர்மாவை புகழ்ந்த சோயிப் அக்தர்
Watch Polimernews Online : https://bit.ly/35lSHIO