நியூசிலாந்து உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டி தொடரான Super Smash இறுதி போட்டியில், Craig Cachopa என்ற வீரர் டைவ் அடித்து ஒற்றை கையில் பிடித்த கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
Super Smash டி20 தொடரின் இறுதி போட்டியில் Wellington Firebirds மற்றும் Auckland Aces அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய Wellington Firebirds அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது.
Wellington Firebirds அணியின் துவக்க வீரராக களமிறங்கிய Devon Conway 36 பந்துகளில் 49 ரன்களை குவித்திருந்தார். இதில் 5 பவுண்டரிகளும் அடக்கம். இவர் தனது 37வது பந்தை எதிர்கொண்டு அரைசதம் அடிக்க எத்தனித்தார்.
அப்போது ஃபீல்டிங் நின்றிருந்த Craig Cachopa அபாரமாக சீறி பாய்ந்து, டைவ் அடித்து ஒற்றை கையால் Devon அடித்த பந்தை கேட்ச் செய்தார். இதனை அடுத்து அரை சதம் அடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பௌலியன் திரும்பி சென்றார் Devon Conway. Craig Cachopaவின் அபார கேட்ச் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது
இதனிடையே 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய Auckland Aces அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.