ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அந்நாட்டு வீரர் டாம் கூப்பர் பிடித்த நுட்பமான கேட்ச் ரசிகர்களை கவர்ந்தது.
ஆஸ்திரேலியா பிக்பாஷ் லீக் போட்டிகளில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் (Adelaide Strikers), மெல்போர்ன் ரெனகேட்ஸ் (Melbourne Renegades) அணியும் அடிலெய்டு நகரில் மோதின.
பேட்ஸ்மென் அடித்த பந்து மைதான எல்லைக்கோட்டுக்கு வெளியே நின்ற மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வீரரான டாம் கூப்பரின் கையில் சிக்கியது. அப்படியே பந்தைப் பிடித்திருந்தால் பேட்ஸ்மேனுக்கு 6 ரன்கள் கிடைத்திருக்கும் என்ற நிலையில் பந்தை மேலே வீசிவிட்டு எல்லைக்கோட்டுக்குள் வந்து பந்தை மீண்டும் பிடித்தார்.
இந்த கேட்ச் எப்போதும் நினைவில் நிற்கும் கேட்சாக இருக்கும் என பிக்பாஷ் லீக்கின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.