உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்று பாகிஸ்தான் என மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
2020 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. சுமார் 10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்றது. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்று வரும் கிறிஸ் கெய்ல், பாகிஸ்தான் பிரிமியர் தொடரில் பங்கேற்றார்.
தற்போது வங்கதேச பிரிமியர் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் டாக்காவில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், பாகிஸ்தானில் வீரர்களின் பாதுகாப்பு நிலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கெய்ல், பாகிஸ்தான் தற்போது உலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகும்.
இங்கு விளையாட வரும் உங்களுக்கு, எங்கள் நாட்டில் ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.எனவே நாங்கள் நல்ல பாதுகாப்பான கைகளில் இருக்கிறோம்.
அதாவது பங்களாதேஷிலும் நாங்கள் நல்ல கைகளில் இருக்கிறோம், இல்லையா? என்று கூறினார் கெய்ல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக கூறப்படும் செய்திகளுக்கு பதில் அளித்த அவர், நான் இன்னும் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளையாட முடியும் என நம்புகிறேன் என்றார்.