இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலாவது போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். திட்டமிட்டபடி போட்டி இரவு 7.00 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பலத்த மழைக்கு நடுவே, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வந்தே மாதரம் பாடலைப் பாடிய காட்சியை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p