சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 3 நாட்கள் நடைபெறும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 210 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்.
வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டபின் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 29 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.