பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆர்டிஸ்டிக் நீச்சல் போட்டியில் சீனா 996 புள்ளிகள் எடுத்து தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில், சீனாவின் ஹோ, ஒலிம்பிக் சாதனையுடன் மொத்தம் 206 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு, நான்காவது இடம் பிடித்து பதக்கத்தை நழுவ விட்டார்.
பெண்களுக்கான ஃபிளைவெயிட் டேக்வாண்டோ போட்டியில் தாய்லாந்தின் பனிபாக் தங்கம் வென்றார். இதன்மூலம், டேக்வாண்டோ போட்டியில் இரண்டு தங்கம் வாங்கிய முதல் தாய்லாந்து வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.