பாரிஸ் ஒலிம்பிக்கின் அகதிகள் அணியில் இடம்பெற்றுள்ள ஈரானின் துடுப்பு படகு வீரர் அமீர் ரெசானேஜா ஹசன்ஜானி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு தப்பி வந்த அவர், கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்து துடுப்பு படகு பயிற்சி பெற்று வருவதாக கூறினார்
உலகம் முழுவதும் பரவியுள்ள அகதிகளுக்கு ஒலிம்பிக்கில் வாய்ப்பளிக்கும் வகையில் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 12 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்க 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.