சென்னையில், நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமையன்று, கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான், கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாரத்தான் ஏற்பாடுகள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞாயிறன்று அதிகாலை 4.30 மணிக்கு கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மாரத்தான் துவங்குகிறது என்றார். ஆயிரத்து 63 திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் உட்பட 73 ஆயிரத்து 206 பேர், மாரத்தானில் பங்கேற்க பதிவு செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மாரத்தானைப் பார்வையிட்டு, அதனை உலக சாதனையாக அங்கீகரிக்க, கின்னஸ் அமைப்பின் நிர்வாகிகள் சென்னை வருவதாக அவர் கூறினார். மாரத்தானில் பங்கேற்போருக்காக ஞாயிறு அதிகாலை 3:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை இலவச மெட்ரோ ரயில் சேவைக்கான பாஸ் வழங்கப்படும் என்றார்.
ஜனாதிபதி நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக்கத்தின் வழியில் மாரத்தான் செல்லாது என்றும், அமைச்சர் விளக்கமளித்தார்.