ஆஸ்திரியாவில் நடைபெற்ற பார்முலா ஒன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் போராடி முதலிடம் பிடித்தார்.
306 கிலோமீட்டர் தொலைவு பந்தயம், ஆரம்பித்தது முதலே ரெட் புல் அணியின் வெர்ஸ்டப்பனுக்கும், பெராரி அணியின் லி கிளெர்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில், பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 26 நிமிடத்தில் கடந்த வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார். அவரை விட 5 வினாடிகள் தாமதமாக வந்த லி கிளெர்க் இரண்டாம் இடம் பிடித்தார்.
7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் எட்டாவதாக வந்து ஏமாற்றம் அளித்தார்.