இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி ஆஸி பிரதமருடன் சேர்ந்து பார்வையிட உள்ளதால் அகமதாபாத் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல்நாள் ஆட்டத்தை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனிசும் பார்வையிட உள்ளனர்.
இதற்காக சுமார் 200 காவல் அதிகாரிகள் மற்றும் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருப்பதாக குஜராத் காவல்துறை துணை ஆணையர் நீரஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.