சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ இடம் பெற்றுள்ள அல்நாசர் அணி வெற்றியை பதிவு செய்தது.
வெள்ளியன்று நடைபெற்ற போட்டியில் அல் தாவூ அணியை அல்நாசர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
அல் நாசர் 17 ஆட்டங்களுக்குப் பிறகு தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது சவுதி ப்ரோ லீக்கில் ரொனல்டோ இடம்பெற்றுள்ள அல் நாசர் அணி இதுவரை ஒரு ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை.
ஐந்து முறை Ballon D'Or வெற்றியாளரான ரொனால்டோ கடந்த டிசம்பரில் அல் நாசருடன் இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.