தம்முடைய உலக கோப்பை கனவு நேற்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாக போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கத்தாரரில் நடைபெற்ற கால் இறுதி போட்டியில் போர்சுக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்த தோல்வியை தொடர்ந்து ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார்.
இந்தநிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே தமது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாக இருந்ததாகவும், இதற்காக கடுமையாக போராடியதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக தனது கனவு நேற்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.