டாக்காவில் நடைபெற்ற இந்தியாவிற்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, 42வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் அதிகப்பட்சமாக 73 ரன்கள் சேர்த்தார். எளிய இலக்கை சேஸ் செய்த வங்கதேச அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 136 ரன்களில் 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இந்நிலையில், 10-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹசன் மிராஸ், முஸ்டாபிஜுர் ரஹ்மான், 51 ரன்கள் சேர்த்து வங்கதேச அணியை வெற்றி பெறச்செய்தனர்.