சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ந்தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.