சர்வதேச சதுரங்க கூட்டமைப்பான பிடேவின், புதிய துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்த கூட்டமைப்பின் உயர் பொறுப்புகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இதில், பிடேவின் தலைவராக ஆர்காடி டிவோர்கோவிச் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டராக தமிழகத்தை சார்ந்த 16 வயதான, பிரணவ் வெங்கடேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2 ஆயிரத்து 500 ரேட்டிங் புள்ளிகளை கடந்ததால், பிடே அமைப்பு அவரை கிராண்ட்மாஸ்டராக அறிவித்துள்ளது. இவர் தமிழகத்தின் 27வது கிராண்ட் மாஸ்டராவார்.