அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பதக்கம் வென்றுள்ளது. ஒரேகான் (Oregon)மாகாணத்தின் யூஜின் நகரில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப்போட்டியில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடம் பிடித்தார். கிரெனடாவின் (Grenada ) ஆண்டர்சன் பீட்டர் 90.54 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.))
பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான பானிபட்டில், அவரது வெற்றியை குடும்பத்தினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.