சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், பவர் பிளேயில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்தியாவின் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
டப்ளினில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆண்ட்ரூ பால்ப்ரைன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் தனது 34-வது பவர் பிளே விக்கெட்டை கைப்பற்றினார்.
இதற்கு முன்பு மேற்கு இந்திய தீவுகளின் சாமுவேல் பத்ரி மற்றும் நியூசிலாந்தின் டிம் சவுத்தி ஆகியோர் பவர் பிளேயில் தலா 33 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.