அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி அயர்லாந்து அணியை முதலில் ஆட அழைத்தது. இதனிடையே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 12ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 12 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆடிய இந்திய அணி 9.2 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.