தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்கில் நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை யமாகுச்சியை எதிர்கொண்ட சிந்து, 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து, சீன வீராங்கனை சென் யுஃபெய்-ஐ எதிர்கொள்ள உள்ளார்.