ஐ.பி.எல் சீசனில் 29 போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அணியின் பிசியோ மருத்துவர் பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், மற்றொரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 20-ஆம் தேதி பூனேவில் MCA அரங்கில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் மோத இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூனே பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.