டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கர் திவால் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவர் சிறைக்கு செல்லவேண்டிய நிலையில் உள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு தனியார் வங்கியிலிருந்து அவர், 50 லட்சம் டாலர் கடனாகப் பெற்றார். வேறு தனிநபர்களிடம் வாங்கிய கடனை கட்ட முடியாததால் தன்னை திவாலானவராக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்த சொத்துக்களை பெக்கர் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் போரிஸ் பெக்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.