கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
தென்கொரியாவின் சன்சியோன் நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொண்ட பி.வி.சிந்து 21-15, 21-10 என்ற நேட் செட்களிலேயே வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
அதேசமயம் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் லக் ஷயா சென், இந்தோனேஷிய வீரரிடம் நேர் செட்களிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.