பெண்கள் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை டேனி வியாட் (D Wyatt) 129 ரன்கள் விலாசினார்.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க வீராங்கனைகள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 156 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தனர்.
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 137 ரன்களில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து அணி, ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.