கிரிக்கெட் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை வேட்பாளராகத் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் இருந்து ஹர்பஜன்சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்ப உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மகத்தான வெற்றிக்கு டிவிட்டர் மூலம் ஹர்பஜன்சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பஞ்சாபில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது