ஃபிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனமும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பும் தங்கள் அமைப்பிலிருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்துள்ளன.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ரஷ்ய ஆண்கள் அணி அடுத்த மாதம் உலகக் கோப்பை பிளே-ஆஃப் போட்டிகளில் விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோடைகால யூரோ 2022 போட்டியில் இருந்து ரஷ்ய பெண்கள் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இரு அமைப்புகளும் கூறியுள்ளன.
இதைத் தவிர ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் உடனான தனது ஸ்பான்சர்ஷிப்பை யுஇஎஃப்ஏ முடித்துக்கொண்டது.