ஐபிஎல்-ல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் என அழைக்கப்படும் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தனியார் முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ள இந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ஏலத்திற்கு முன்பாகவே அணி நிர்வாகம் அவரை 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதே போல் தொடக்க வீரர் ஷுப்மன் கில் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷித் கான் உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் கிரிக்கெட் பாரம்பரியத்தை போற்றும் வகையில் தங்கள் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என பெயர் சூட்டியிருப்பதாக அகமதாபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.