இந்திய கிரிக்கெட் அணியில் 4 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் 6-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்க இருந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கைக்வாட், கூடுதல் வீரர் நவ்தீப் சைனி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் உள்பட 7 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தொடரை திட்டமிட்டபடி நடத்த மயங்க் அகர்வாலை தொடக்க வீரராக களமிறக்க முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.