நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிய நிலையில், நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங் அகர்வால் 150 ரன்கள் எடுத்த நிலையில், அக்சர் பட்டேல் அரைசதம் அடித்தார்
இந்நிலையில், இந்திய அணி 325 ரன்களில் ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் அஜாஸ் பட்டேல் மும்பையை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இந்தியாவின் அனில் கும்ப்ளே மற்றும் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் ஆகியோர் மட்டுமே இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், அந்த சாதனையில் மூன்றாவதாக அஜாஸ் பட்டேலும் இணைந்துள்ளார்.