கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாத கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரம் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏலம் நடப்பதற்கு வசதியாக, ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இந்த மாதம் 30 ஆம் தேதிக்கு முன்னர் அளிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மெகா ஏலத்தில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சுமார் 95 சதவிகிதம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஏல நிகழ்ச்சியே ஒரு மெகா ஈவன்டாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதி இருந்தாலும், சில அணிகளின் உரிமையாளர்கள் தங்களது அணியை புத்தம் புதிதாக மாற்றி அமைக்கும் எண்ணத்துடன் இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.