இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நாளை நடைபெறுகிறது.
டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்போடு நாளை களம் காண்கிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகியுள்ளார்.
சூர்யகுமார் யாதவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம் கிடைத்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கு அஜிங்கா ரஹானே கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், துணை கேப்டனாக புஜாரா நியமிக்கப்பட்டுள்ளார்.