இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை தவிர்க்கவும், ஹலால் செய்யப்பட்ட உணவுகளை மட்டும் தான் உண்ண வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டதாக நேற்று தகவல் வெளியானது. இதனை அடுத்து பிசிசிஐ-க்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் இந்த தகவலை மறுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளர் அருண் துமால், கிரிக்கெட் வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கவில்லை என்றும் என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.