முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பியுமான கௌதம் கம்பீர், தனக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக டெல்லி போலீசில் புகாரளித்துள்ளார்.
போன் மற்றும் மின்னஞ்சல் வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம் இருந்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து டெல்லி ராஜேந்திர நகரிலுள்ள கௌதம் கம்பீட் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னஞ்சல் வந்த குறிப்பிட்ட முகவரி உள்ளிட்டவை குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.