அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் சிஎஸ்கே அணிக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும், அந்த தருணம் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், வரும் ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் இணைய உள்ளதால் போட்டிகளில் மேலும் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என்றும் ஜெய் ஷா கூறினார்.